Saturday, February 27, 2010

Masi Maham

பிப்ரவரி 28 மாசி மகம்

குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆனவுடன் வரும் மாசி மாத மக நட்சத்திரத்தில் மகாமக விழா நடத்தப்படும் இதுவரை 1518 ல் துவங்கி நடந்து வரும் இந்த விழா கடைசியாக 2004 ல் கொண்டாடப்பட்டது. அடுத்த மஹா மகம் 2016 ல் நடக்கிறது. சில சமயங்களில் 11 ஆண்டுகளிலேயே மஹா மகம் வந்ததும் உண்டு. உதாரணமாக, 1518 ம் ஆண்டுக்கு பிறகு 1529 ம் ஆண்டிலும் 1589 க்கு பிறகு 1600 ம் ஆண்டிலும் 1672 க்கு பிறகு 1683 ம் ஆண்டிலும் 1850 க்கு பிறகு 1861 லும் 1945 க்கு பிறகு 1956 லும் கொண்டாடப்பட்டது. காரணம் குரு பகவான் சற்று முன்னதாகவே சிம்ம ராசிக்கு பெயர்சியகிவிட்டதல்தான்.

16 லிங்க தரிசனம்

மஹா மக குளக்கரையை சுற்றி வந்தால் 16 லிங்கங்களை தரிசிக்கலாம்

பிரம்ம தீர்தேஸ்வரர்
முகுந்தேஸ்வரர்
தநேஸ்வரர்
விருஷ்பெஸ்வரர்
பரனேஸ்வரர்
கோணேஸ்வரர்
பக்திகேஸ்வரர்
பைரவேஸ்வரர்
அகஸ்தீஸ்வரர்
வ்யஷேஸ்வரர்
உமை பகேஸ்வரர்
நைருதீஸ்வரர்
ப்ரம்ஹேஸ்வரர்
கங்கதேஸ்வரர்
முத்த தீர்தேஸ்வரர்
க்ஷேத்ர பலேஸ்வரர்

மஹா மக குளத்தில் நீராட வேண்டுமென்ற அவசியம் கூட கிடையாது. இந்த குளத்தை ஒரு முறை சுற்றி வந்தாலே பாற்கடலை கடைந்த போது மத்து ஆக  இருந்த மேரு மலையை நூறு தடவை சுற்றிய பலன் கிடைக்கும். இரண்டு முறை சுற்றினால் சிவா லோகத்தை வலம் வந்த பலனும் மூன்று தடவை சுற்றினால் பிறப்பற்ற நிலையும் ஏற்படும்.

No comments:

Privacy Policy