Sunday, June 18, 2017

My Life Story என் (சோக) கதை

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்களை தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. பேச்சுவழக்கு தமிழ் இங்கு பொருத்தமாக இருக்கும்னு நினைக்கிறேன். கல்யாணமாகி 8 வருஷமாச்சு. ரெண்டு குழந்தைகள். படிக்கிறாங்க. இந்த எட்டு வருஷத்துல எனக்கு அரசாங்க வேலை கிடைச்சிருக்கு. BP வந்திருக்கு. Insomnia ங்கிற தூக்கம் வராத வியாதில கஷ்டப்படுறேன். நிம்மதி இல்லை. தூக்கம் இல்லை. புரிதல் இல்லாத மனைவி. சின்ன சின்ன காரணங்களுக்கு தினமும் சண்டை. அப்பாவி மாமியாரோட சண்டை. என் அண்ணண்கள் அண்ணிகள் எல்லோரையும் எப்பவும் எதிரியா நினைக்கிறா . அவங்க என்ன சொன்னாலும் செய்தாலும் அதில் தப்பு கண்டுபிடுச்சு அவங்களை கண்டபடி பேசறா? குழந்தைகள் அவ சொல்றபடி தான் நடக்கனும் பேசனும். விளையாடனும். தூங்கனும். மொத்தத்துல அவதான் கண்ட்ரோல் பண்ணனும். எனக்கு எந்த உரிமையும் இல்லை. டிரஸ் கூட அவ எடுத்தது தான் போடனும். ஆனா ஒன்னு. எங்களுக்குள் எந்த பொருத்தமும் இல்லைனு லேட்டாதான் தெரிஞ்சது. எனக்கு உப்பு, காரம் ஆகாது. அம்மா சமையல் எல்லா கம்மி உப்பு காரம்தான். இவ பல தடவையும் சொன்ன பிறகும் உப்பை குறைக்கல. விளைவு. இப்ப 38 வயசில உயர் இரத்த அழுத்தம். இரவில் தூக்கமின்மை. இவ சுயநலம் இதோடு முடியல. நான் அரசு வேலை கிடைத்து வெளியூர் சென்றேன். அப்பா பையன் லோக்கல் ஸ்கூளில் படிச்சான். அதை காரணம் காட்டி என்கூட இவை வரலை. இவளும் இங்க வேலைக்கு போக ஆரம்பிச்சா. நான் 2 வருஷமா ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டு கஷ்டப்படேன். சமீபத்தில் பிளட் டெஸ்ட் எடுத்தபோது கொலஸ்ட்ரால், ஈரல் கொழுப்பு (fatty lever) இருப்பது தெரிஞ்ஞ்சது. மக்களே தெரிஞ்சுக்கோங்க. குழந்தை  பிறக்கும் வரைக்கும் தான் பொண்டாட்டிக்கு புருஷன் வேணும். அதுவும் ஆண் குழந்தை பிறந்தால் புருஷன வேலை செய்யற  சம்பாதிக்கிற யந்திரமா நினைக்கிறாங்க. தப்பா நினைக்காதீங்க. என்னால தாங்க முடியாம சொல்றேன். குழந்தை மட்டும் தான் வேணுமனா யார்கூடவாவது 10 நாள் போக வேண்டியதுதானே. ஏன் கல்யாணம் பண்ணி எங்க வாழ்க்கையை நாசமாக்கினீங்க. எங்களுக்கு மட்டும் குழந்தைகள் மேல் பாசம் இருக்காதா? இருக்காதா? அக்கறை இருக்காதா? ஆயிரம் ஆயிரமா செலவு பண்ணாதான் CBSE ஸ்கூலில் அதிக பீஸ் கட்டி படிக்க வச்சாத்தான், புது டிரஸ் பீரோ  நிறைய வாங்கி கொடுத்தாதான் குழந்தை மேல் பாசம் இல்லாட்டி வேஷம்னு போகும்.சொல்றிங்க. வேற வழி இல்லாம எல்லாத்தையும் கேட்டுட்டு பேசாம இருக்க வேண்டி இருக்கு. ஆ ஊன்னா குழந்தைகளை வச்சு பிளாக் மெயில் பண்றத தான் தாங்க முடியல. டார்ச்சர் தாங்காம சில தடவை கை நீட்டி அடிச்சுட்டேன். உன் சொத்துல பங்கு இருக்குனு சொல்றிங்க ஒத்துக்கறேன். உங்கப்பா சொத்துல உங்களுக்கு பங்கு இருக்குல்ல. அத முதல்ல வாங்கிட்டு வாங்க. இதுல மட்டும் சமத்துவம் சம உரிமை இல்லையா? பையன திட்டறதும் அடிக்கறதும் அகக்கரையில தான். டிவி பாத்து பாத்து அவங்க கண்ணு தான் பூத்து போகும். கண்டிக்க வேண்டியது அப்பனோட உரிமை மட்டும் இல்ல. கடமையும் தான். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்ககளுக்குத்தான் செலவு செய்றேன். வெளியூர் போற வரைக்கும் 5 வருஷமா மாதாமாதம் மளிகை லிஸ்ட் வாங்கி போய் நானே மூட்டை சுமந்து வருவேன். நாப்கின் லிருந்து என்ன சொன்னாலும் வாங்கி வருவேன். அம்மிக்கல் கூட பைக்ல சுமந்து வந்திருக்கேன். (குழந்தைக்கு ராகி மாவு அரைக்கவாம்!). வாராவாரம் சந்தைக்கு கூட்டி போய் காய்கறி வாங்கி கொடுப்பேன். பால் வாங்கி வந்துருவேன். அதெல்லாம் நம்ம கடமைதான். மொதல்ல இருந்து வர்றேன். கல்யாணமாகி எங்க வீட்டுக்கு வந்து 10 நாள் இருக்கும். திடீருன்னு கோவிச்சுகிட்டா. அண்ணிய பைக்ல கூட்டி வந்ததும் அவங்க கூட போன்ல பேசுனதும் வேற விதத்த்துல எடுத்துக்கிட்டா. எனக்கு வந்தது ஆத்திரம். அடக்கிகிட்டேன். அம்மா ஸ்தானத்தில் இருக்கும் அண்ணியை அப்படி நினைத்தால் யாருக்கு ஆத்திரம் வரத்து. தவறான முடிவெடுத்து பொருத்தமில்லாத மணம் செய்தால் இதுதான் தண்டனை என்று முடிவு செய்துகொண்டேன். இதில் கல்யாண நாளன்று இரவு இவளுக்கு கடும் வயறு வலி. (மாத விலக்கு இல்லை). மருத்துவமனையில் டிரிப்ஸ் ஏற்றி விட்டு வந்தார்கள். பின்நாள் தான தெரிந்தது. சிறுநீரக கல் என்று. மறைத்துவிட்டார்கள். பெரிய மனதுடன் மன்னித்துவிட்டேன். கம்மிங் டூ பாயிண்ட். மணமாகி ஒரு மாதத்தில் கர்ப்பமானாள். அப்ப போனதுதான் எனக்கு நிம்மதி. இன்னிக்கு வரைக்கும். அப்பவே சொல்லிட்டா குழந்தை பெத்து வந்தா தனி குடித்தனம் தான். இல்லாட்டி அம்மா வீட்டுல தான் இருப்பான்னு. அப்ப நான் பைனனான்சியலா பூஜ்யம். என்ன பண்றதுன்னு தெரியல. வாடகை அட்வான்ஸ் கொடுத்து தாக்கு புடிக்க முடியுமான்னு சந்தேகம். என் வாழ்க்கைல ஒருத்தருக்கு நன்றி சொல்லனும்னா இதுதான் சரியான இடம். அது என் 2 வது அண்ணன் தான். எனக்கு 24 வயது இருக்கும்போது அப்பா இறந்துட்டார். கல்யாணம் செஞ்சு வச்சு தொழில் தொடங்க பண உதவி செஞ்சது இவர்தான். நல்ல எண்ணத்தில் தான் செய்தார். நமக்கு வாய்க்கிறது தானே வாய்க்கும். அவருக்கு மறுபடியும் சோதனை. வாடகை வீடு வேண்டாம்னு பக்கத்துல ஒரு சைட் வாங்கி சின்னதா ஒரு வீடு கட்டி கொடுத்தார். இன்னிக்கு வரைக்கும் அவருக்கு நான் ஒரு பைசா திருப்பி கொடுக்கல. எம் பொண்டாட்டிக்கு நன்றி கடுகளவு கூட இல்ல. குழந்தை பெத்து சாபதத்துல ஜெயிச்சு (!?) புது வீட்டுக்கு குழந்தை உடன் வந்தாள். ஒரு நாள் சாயந்திரம் மழை. புது வீட்ல (சிமெண்ட் ஸீட் கூரை) லைட்ட்டா மாலை ஒழுகிடுகிச்சு. அவ்வளவுதான் கத்தி தாம் தூம்னு சத்தம் போட்டு எங்கம்மாவை திட்டி அண்ணனை திட்டி. பொம்பளையா அவ. ராட்சசி. அடுத்து குழந்தைக்கு ஒரு வருஷம் ஆனதும் அவங்க அம்மா வீட்ல விட்டுட்டு mphil படிக்க்கணும்னு சொன்னா. எனக்கு குழந்தையை பிரிக்க இஷ்டம் இல்ல. ஆனாலும் சம்மதிச்சு mphil படிக்க வச்சேன். ஆனால் lecturer velai கிடைக்கல. அக்கவுண்ட் வேலைக்கு போனா. இப்பகூட பாருங்கள் மாசம் 12000 சம்பாரிச்சாலும் இந்த வருஷம் பீஸ் 20000 நான் தான் காட்டினேன்.(ப்ரீ கேஜி கே 20000) இப்ப 2 வது. ஆனா எந்த ஸ்கூல் னு முடிவு செய்ய எனக்கு உரிமை இல்லை. ஆனாலும் நான் எதுவும் வீட்டுக்கு செய்யறதில்லை னு சொல்றா. நான் இவளிடம் செலவு கணக்கு கேட்பதில்லை. சிக்கனமா செலவு செஞ்சா யாருக்கு லாபம். குழந்தைக தானே அனுபவிக்க போறாங்கா. அவங்கள இப்பவே கடனாளியாக்கிட்டு இருக்கா. இன்னும் கேளுங்க. இப்பவே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். நாங்க மிடிள் கிளாஸ்னு. இவ தம்பிக்கு கல்யாணம் வந்தது. ஐம்பதாயிரம் மொய் வைக்கணும்னா. சரின்னு என் பேர்ல நகையை அடமானம் வச்சு 50000 மொய் செஞ்சோம். மூணு வருஷமா அதுக்கு வட்டி 18000 நான் கட்டிட்டு வந்தேன். இதுல ஒரு கொடும என்னன்னா எங்கம்மா போட்ட 5 பாவுன் தாலி கொடி தான் இப்ப அந்த கடனுக்கு அடமானமா வைக்கப்பட்டிருக்கு. உலகத்துல எங்கியாச்சும் இப்படிலாம் கொடும  நடக்குமா? எங்கம்மா என்ன போலவே வாய் பேசாத ஊமைனு இப்ப தெரியுதா? இவங்க இவ்வளவு செஞ்சும் அவங்க கிட்ட சிடுசிடுன்னுதான் பேசுவா. பாவம் எங்க அம்மா. இத்தனைக்கும் இவ ஆபிஸ் க்கு நடந்து போறான்னு  எங்கம்மா தான் காசு கொடுத்து டூ வீலர் வாங்கி கொடுத்தாங்க. இந்த கொடுமையை சொல்லக்கூடாது தான் ஆனாலும் ஷேர் பண்ணினா மனா பாரம் குறையும். இவ பாவம் வேலை க்கு போறாளேன்னு வாஷிங் மெஷின் வாங்கி கொடுத்தேன். ஆனா ஒரு இன்சிடென்ட் என் மனச புண்ணாக்கிடுச்சு. நான் வார விடுமுறையில் வீட்டுக்குவ வந்து குளித்து கழட்டி போட்ட உள்ளாடை அடுத்த வாரம் வரும்போது அதே இடத்தில் கிடந்தது. எடுக்காமல் துவைக்காமல். 2-3 தடவை இது மாதிரி நடந்துருக்கு. நான் எதுவும் பேசல. எனக்கு 2 வைத்து பெண் குழந்தை. அந்த குழந்தையையும் வளர்க்க சோம்பேறித்தனப்பட்டு இவங்க அம்மா வீட்ல விட்டுட்டா. என்னால் தடுக்க முடியல. சோ 2 குழந்தைகளையும் மிஸ் பண்ணி அவங்க கூட கிடைக்கற சின்ன சின்ன சந்தோஷங்களை இழந்து அவங்க மழலை பேசறதை தத்தி தவழ்வதை மிஸ் பண்ணி இதெல்லாம் ஒரு வாழ்க்கையா சே! சமீபத்தில் தான் எனக்கு ஒன்னு தோணுச்சு. பையனுக்கு விஷம் கொடுத்து நானும் சாப்பிட்டு இவளுக்கு வாழ்க்கை முழுக்க மறக்க முடியாத தண்டனை கொடுக்கணும்னு. ஆனாலும் படிச்ச அரசு அதிகாரியாக உள்ள என்னால அதை செய்ய முடியல. ஆனாலும் கடவுள் இவளுக்கு தண்டனை கொடுப்பார்னு நம்பறேன். வினை விதைத்தவன் அறுவடை செய்யணும்ல. இப்படி என் சந்தோஷங்களை பறிச்சு என்ன நடை பிணம் ஆக்கினவளுக்கு காலம் தண்டை தரும்.
இதையெல்லாம் ஏன் எழுத ஆரம்பிச்சேன்னா இன்னிக்கு காலைல சின்ன இன்சிடென்ட். சப்பை இன்சிடென்ட். எங்க அண்ணன் என் காரை எடுத்து வெளியே போனார். அண்ணி வந்து இவளிடம் சொல்லி அண்ணன் மதியம் வந்துவிடுவார் என சொன்னார். இவை இதை தப்ப புரிஞ்சுகிட்டு நான் வீட்டில் இருப்பதால் வந்து சொல்கிறார் இல்லாவிட்டால் சொல்லமாட்டார். எல்லாரும் உங்க முன்னாள் நடிக்கிறார்கள் என சண்டை போட்டு இப்ப வரைக்கும் பேசாமல் இருக்கிறாள். (என்ன வில்லத்தனம்). ஒரு வாரத்திற்கு முன் whats app மூலம் சண்டை போட்டாள்.  நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள். நான் அவளை அடிமையாக வைத்திருக்கிறேனாம். black day of my life ஆரம்பிச்சா . எனக்கு புரியல. அப்புறம் தான் தெரிஞ்சது எங்க கல்யாண நாள்னு. நான் வேலை பிஸில மறந்துட்டேன். சாரி கேட்டேன். I am a slave னு போட்டா . எனக்கு அடிமை இல்லையே அப்புறம் யாருக்கு னு கேட்டேன். நான் கேட்டது தப்பா சார்? இவளை சந்தேக பட்டுட்டேனாம். அவ்வளவுதான். ருத்ர தாண்டவம். எல்லா முடிவும் இவ  தான் எடுப்பா. ஸ்கூல் சேத்தறதுலருந்து என்ன பிராண்ட் வாஷிங் மெஷின் என பிராண்ட் சமையல் எண்ணெய் னு எல்லாம் இவை டிசைட் பண்ணுவா. ஆனா இவை எனக்கு அடிமையாம். எனக்கு ஒரு ஆசை இருந்தது. கல்யாணம் ஆன பின்னாடி குளிக்கும்போது பொண்டாட்டி கிட்ட சொல்லி முதுகு தேச்சுக்கணும்னு. அது நடந்திருக்கும்னு நினைக்கிரிங்க? இன்னும் நிறைய இருக்கு. அடுத்த போஸ்ட்ல சொல்றேன். அப்புறம். உங்க கமெண்ட்ஸை எதிர்பார்க்கிறேன். என் (சோக) கதை

Monday, March 19, 2012

Any amateur astronomers in coimbatore?

Recently i developed interests in astronomy. Everyone should have studied astronomy in schools. As we grow up due to family and social commitments we don't have time to hobbies like astronomy. Even in schools and colleges astronomy is taught in theory only. In India majority of schools and colleges lack lab facilities like Planetarium, Telescopes and binoculars to give the students a practical knowledge.

Astronomy is an excellent hobby and useful time pass.Even with naked eye (unaided) you can see thousands of stars on a clear night. With your eyes you can see planets like Jupiter, Venus and Mars.With binoculars you can see planets like Saturn. With binoculars and Telescopes you can see star clusters, nebula, supernova, comets, asteroids and many more celestial wonders.

Internet is a great help for amateur astronomers. There are lot of articles, news and guides for amateur astronomers on internet.

There are free software programs that help you locate stars, planets and other deep space objects in real time. Even you can track man made satellites using the software. A good freeware planetarium software is 'stellarium'.  It is freely available under General Public License(GPL). Visit www.stellarium.org/ to download the software for windows.

To know more on amateur astronomy and equipments visit http://www.skyandtelescope.com

I have just started to peep into the sky. I am trying to identify stars and constellations. This month Jupiter and Venus is seen on the western horizon. You can see it with bare eyes. If anyone interested in amateur astronomy in Coimbatore don't hesitate to contact me.


Birthday dress


These videos are of my sun Nishaant's. We took it yesterday in Chennai silks, Coimabtore. We went there after a visit to KMCH Hospital. Nishaant has adenoids (growth of tissues in throat that blocks inhalations and gives breathing troubles). Earlier a month before ENT specialist Dr. Ramanikanth. He confirmed growth of tonsils and prescribed some nasal spray. Our pediatrician Dr. Rajendran  prescribed a tablet for 30 days (I think it is Montair). These medications were good to nishaant and his conditions improved. He had breathing trouble during night and after medication these troubles vanished. Earlier Dr. Ramanikanth suggested surgery for adenoids. Since he is only 2 yrs old surgery was to be avoided. I hope he will recover without surgery.

After our visit to hospital we went to crosscut road for his birthday shopping. My wife preferred some sherwani type clothing. He put on those cloths and i took the above videos. How happier he looks! By the way, his birth is on 2nd April.

Wednesday, November 9, 2011

Join the 3G Revolution! Data Card Magic!!

Internet was introduced in India during the end of 1990's. By then we had Windows 95 / 98 with Pentium II / III  / Celeron processor and 16/32 MB RAM and 1/2 GB Hard Drive. Dishnet and Sify Provided Internet Dial-Up Services. It took even hours to get connected to the internet. There was separate charges for telephone and ISP. Since the cost is huge only few afford to have internet connection at home. Browsing centers were charge about 40 rupees per hour.
Now the situation has changed. Revolution in telecom industry changed everything. There are so many players like BSNL, Reliance, TATA, Aircel, Airtel, Idea, Uninor etc.
Personal Computer price has dropped dramatically. Now you can own Intel Atom processor Powered PC with 2 GB RAM, 500 GM Hard Drive, 15.5" TFT Monitor for as low as Rs. 13000.

Now come to the internet connection. For those living in cities have many options. BSNL, Airtel, Reliance and other players have infrastructure for landline based broadband internet. For example 2 MBPS unlimited connection is available at Rs. 2000 per month in Tirupur. For those living in rural and village areas options are limited. BSNL network is the only option for rural areas. With the advent of Wireless broadband the situation has changed. Wireless broadband was first offered on CDMA networks like Reliance. Reliance offers netconnect broadband. TATA Indicom offers Photon. MTS entered the market lately and acquired market in Tamilnadu and other states. For these connections you have to buy USB Data Cards which are network locked. That means you can use these device on their particular networks only. The situation changed with the  emergence of 3G data cards. Theoretically they offer upto 7.2 MBPS download speeds. My home is located in a remote area and i don't have many options for internet. So i wanted to try 3G cards. I use Aircel (Coimbatore). and have quiet good coverage in my area. I bought 3G card through ebay. Huawei E173 cost Rs. 1600 inclusive of shipping. After inserting the card autorun will install modem drivers and also Mobile partner software. You have to activate 3G plan. For example in Aircel send messsage 'START 3G' to 121. It will be activated in 1 or 2 hours. For me it was activated in 10 minutes. You can also use the card only with GPRS/EDGE connected. But this is very slow. Put your SIM card in the slot of 3G card. Insert it in the USB port and open the mobile partner software. If 3G is activated on the SIM it will show WCDMA AIRCEL on the lower left corner with signal strength. In profile name select Aircel (If you use Aircel SIM) and click connect. Now you are connected to the superfast 3G network. Now on the lower left you can see HSPA Aircel. Open your browser and start browsing. You can watch streaming videos, read mails, use social networks like facebook and download files, pictures, videos with the 3G speed. In my case i recharged only for 3 days Aircel Pocket internet for Rs. 14. Before activating 3G it worked in EDGE mode. I did not recharge for 3G. After activating 3G it worked at about 1.5 MBPS. At speedtest.net i get around 1.6 MBPS speed. You can take this data card in your pocket and use it anywhere in laptop / pc wherever 3G network is available!. So try this amazing piece of technological marvel.

Privacy Policy